Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சுரிளிச்சாமி என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!