திருச்சி மாவட்டம், துறையூர் பெரம்பலூர் சாலை காமண்டி பகுதியில் அரசு அனுமதித்த 10 அடி உயர விதிமுறையை மீறி 18 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது, தகவலறிந்த துறையூர் வட்டாட்சியர் சித்ரா உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முத்தையன்

தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர், எடுத்து துறையூர் பகுதிகளில் 10 அடிக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் 5 இடங்களில் இருப்பதாக கூறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மேலும், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பிற விநாயகர் சிலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவிய நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், 18 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வெளிமாநிலங்களில் இருந்து ஒரு லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டதால் கூறப்படுகிறது..
இதனால் வாங்கப்பட்ட விநாயகர் சிலை வீணாக பயன்பாட்டில் இருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
