மகாராஷ்டிராவில், கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் பலியான நிலையில், அதை தயாரித்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வட் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர், அருகில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் சாராயம் வாங்கி குடித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் அனைவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுவலியால் அவதிப்பட்டதுடன் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனன்றி, ஒவ்வொருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களில் 18 பேர் பலியாகினர். பிம்ப்ரி சிஞ்சவட்டில் உள்ள புகேவாடி, டபோடு பகுதிகளைச் சேர்ந்த 13 பேரும், புனேவின் ஹடப்சர் மற்றும் காலேபடல் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேரும் இதில் அடங்குவர். உடற்கூராய்வு அறிக்கையில் அனைவரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது உறுதியானது.
கள்ளச்சாராயத்தை தயாரித்து, விற்பனை செய்த யோகேஷ் வாங்கடே என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்
