Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கை சிறையிலிருந்து பாம்பன் மீனவர்கள் 19 பேர் விடுதலை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த பிப்ரவரி 26ம் தேதி, 2 விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில், பாம்பன் அருகே, நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடலோர காவல் படை ரோந்து கப்பல், 2 விசைப்படகுகளையும், சுற்றி வளைத்து பிடித்தது. பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, 19 மீனவர்களையும் கைது செய்தது.

அதோடு 2 விசைப்படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு அழைத்து சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதினார். இதற்கிடையே இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, 19 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
அவர்கள், மீனவர்களை தங்கள் பராமரிப்பில் வைத்து கொண்டு, இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால் எமர்ஜென்சி சர்டிபிகேட் மற்றும் விமான டிக்கெட்டுக்கான ஏற்பாடுகளையும் தூதரக அதிகாரிகள் செய்தனர். இதையடுத்து 19 மீனவர்களும் நேற்றிரவு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!