Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி மே 17- திருச்சி பாலக்கரை பெல்சி மைதானம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். இதனை அடுத்து மேற்கண்ட இரண்டு வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 25) கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20)என்பது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!