Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் திருவண்ணாமலை மாவட்டம் கண்டியகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை ஆகியோர் தர்மராஜை கத்தியை காட்டி அச்சுறுத்தி 1500 ரூபாய் பணம் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் ராஜதுரை ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!