Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

கட்டுக்கட்டாக பணத்துடன் 2 லாட்டரி வியாபாரிகள் கைது..   திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதை அடுத்து உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது புத்தூர் நான்கு ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.அதில் இரண்டு பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.இரண்டு நபர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் உறையூரை சேர்ந்த தனபால் (வயது 54), உறையூரை சேர்ந்த சரவணன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ரூபாய் பணம் 60 மற்றும் இரண்டு செல்போன்கள் சிக்கியது.மேலும் லாட்டரி சீட்டுகள் விற்பதற்காக துண்டு சீட்டில் எழுதி வைத்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய விவேக், சிவா ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற 2 பேர் கைது – பணம், கஞ்சா பறிமுதல்  பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம் தெரு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பாலக்கரை முதலியார் சத்திரம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக ரூபன் (வயது 40) சிம்சன் ஜெபத்துரை (வயது 24 ) இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் . இவர்களிடமிருந்து 2.250 கிலோ கஞ்சா மற்றும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
error: Content is protected !!