Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி காஜாமலை பஸ் நிறுத்தம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது மணப்பாறை அருகே உள்ள பனையம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வினோத் (வயது 24)என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து அவரிடமிருந்து 60 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி புத்தூர் ஆபீஸ் சர் காலனி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை
நெடுஞ்சாலக்குறிச்சியை சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு இருவரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

error: Content is protected !!