Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டு, கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் திருச்சியில் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (45). பாலக்கரையை சேர்ந்த கோபிநாத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 600ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!