கொடைக்கானலில் அதிகரித்துவரும் கட்டடங்களால் மழைக் காலங்களில் 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கொடைக்கானல் அருகேயுள்ள குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ளது. இதை தடுப்பதற்காக வருவாய், தீயணைப்பு உள்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 28 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம்
