எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறிவு. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
பன்னாட்டுத் தமிழகல்வெட்டியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், தென்னகத்தவரே பெரும்பான்மையினர் என்றும் அறிஞார்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்ய சுவர்களில் பெயர்களைப் பொறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றினர்.

