துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் 20 நிமிடத்தில் 7 முறை வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துறைமுகத்தின் எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான பின்னணி இதுவரை தெரியவில்லை. சில ஊடகங்கள் ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடந்ததாக கூறுகின்றன. சம்பவத்தை வீடியோ எடுத்ததாக 2 பேர் கைதாகியுள்ளனர். உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
