Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 22.8 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 22.8 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின்பேரில் சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

முதல் நிலைக் காவலர் கண்ணதாசன், காவலர்கள் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி சென்றனர்.

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 4-க்கு வந்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ரயிலின் பின்புற பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்குப் பை கண்டெடுக்கப்பட்டது.

அதனை சோதனை செய்ததில், அதில் குட்கா இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த எடை: 22 கிலோ 800 கிராம்.

குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் எதிரிகள் யாரும் பிடிபடவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஒப்படைக்கப்பட்டது.

சிறப்பு ரோந்து சோதனையில் 22.8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!