உலக இசை தினத்தை ஒட்டி கரூர் நாரதகான சபாவில் சகோதரிகள் டாக்டர் கே. விஸ்வ ஜனனி மற்றும் பரணி பார்க் பள்ளி மாணவி நேத்ரா மற்றும் குழுவினர் 22 பேர் தொடர்ந்து 10 மணி நேரம் ஐந்து நிமிடம் தொடர்ந்துவீணைவாசித்து இரண்டு புதியஉலக சாதனை படைத்தனர் இந்த சாதனைகளை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட் இந்தியா அகாடமி நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்தது. அதன் தலைவர் கின்னஸ் சாதனையாளர்
டிராகன் ஜெட்லி நேரில் பதிவு செய்து 24 மாணவ மாணவிகளுக்கான இரண்டு உலக சாதனை சான்றிதழ் பதக்கம் கோப்பை ஆகியவற்றை வழங்கினார். அதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் சூரிய நாராயணன் ஆகியோர் உலக சாதனை மாணவிகள் டாக்டர் கே விஸ்வ ஜனனி, நேத்ரா, ஜனிகா, காவியா, சே. காயத்ரி, ப.சு காயத்ரி, ரித்திகா, ஸ்ரீமதி வேத ரித்திகா, இராம் சுந்தர், ரமாதேவி, வொஜ்ஜலா தன்வி, இனியா, வரலக்சுமி, புவனேஸ்வரி, ஜீவனா, தேஜஸ்வி, பூஜா, ரங்கநாத், ஆஷ்ரிதா.ஸ்ம்ருதி, தன்ஷிகா ஸ்ரீ, லட்சயமணி, பிரியதர்ஷினி, ஸ்ரீவித்யா உள்ளிட்டோருக்கு வழங்கி பாராட்டினர். சாதனை நிகழ்வு
இசை ஆசிரியை காயத்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில்
நடந்தது
மேலும் விழாவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
