பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை, ‘ஜியாரத் கிராஸ்’ பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும், 2 வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் BLA கூறியுள்ளது. இது பலூச் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இது தொடர்பான சினிமா பாணியிலான அதிர்ச்சி வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
