போதை மாத்திரை விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தார். அப்பொழுது அங்கு ஒரு வீட்டின் அருகே போதை மாத்திரை விற்னை செய்த
அதே பகுதியை சேர்ந்த பிலாவுதீன் என்பவரது மனைவி பர்வீன்பானு (42) மற்றும் பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்த ஹரிஷ் ராகவேந்திரன் (19)ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் பாட்டில்கள், ஊசிகள் பணம் ரூபாய் 55 ஆயிரம், செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வருவதாக மதுவிலக்கு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த அகிலேஷ் (வயது 24) என்பவர்ரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அகிலேஷ்யை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
திருச்சிஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் சாவு
திருச்சி எத்தனை கோப்பு நாகநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் வயது 52 இவரது மனைவி ராஜேஸ்வரி (46). இவர் கர்ப்பப்பை கோளாறு காரணமாக கடந்த ஆக28 ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பல நன்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் போது ஒருவர் சாவு
திருச்சி காட்டூர் கணபதி நகர சேர்ந்தவர் லாரன்ஸ்வயது 43 இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் மன்னார்புரம் சாலையில் மிலிட்டரி மைதானம் அருகில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் லாரன்ஸ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இந்த விபத்தில் லாரன்ஸ் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சைக்காக வேண்டி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கண்ட்ரோல்மெண்ட் தெற்கு போக்குவரத்து கழனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
