Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் இருந்து கோவைக்கு 2500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், பல்வேறு அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காகத் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிடங்குகள் மற்றும் ஆலைகளிலிருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட இந்த 2,500 டன் அரிசி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதற்காகக் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

error: Content is protected !!