தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜன. 1ம் தேதி முதல் செப்.18ம் தேதி வரை 16,830 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் உத்தரவு-பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
