Skip to content
Home » 28ம் தேதி ”ஜெயிலர்” படத்தின் இசைவௌியீட்டு விழா….

28ம் தேதி ”ஜெயிலர்” படத்தின் இசைவௌியீட்டு விழா….

டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா, ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!