Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலாளியை கற்களால் தாக்கிய 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

தொழிலாளியை கற்களால் தாக்கிய 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

தொழிலாளியை கற்களால் தாக்கிய 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (50). தொழிலாளியான இவர் செந்தண்ணீர் புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அவரை வழிமறித்து கற்களால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாலக்கரை பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23), செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த ரகுமான்கான் (வயது24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவலாளிடம் தகராறு ஈடுபட்ட 3 பேர் கைது

திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 54 ) இவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரித்திவிராஜீ
க்கும் விமான நிலைய பகுதியை சேர்ந்த பிரான்ஸ் சிவா 1 (வயது19), தினேஷ் (வயது 28), ராமன் கிஷோர் (வயது 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 10 ஆம் தேதி இவர்கள் 3 பேரும் பால்ராஜ் வீட்டிற்கு சென்று கதவை எட்டி உதைத்து உள்ளனர். இதுகுறித்து பால்ராஜ் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பால்ராஜ் விமான நிலைய போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரான்சிஸ் சிவா,தினேஷ், ராமன் கிஷோர் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து- ஒருவர் கைது

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது28) அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (வயது 19. ) நண்பர்களான இவர்கள் இடையே சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஷ்வா, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கேகே நகர் பகுதியை சேர்ந்த பொன் அஜய் (வயது 24), மதுசன் (வயது 24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டு அலங்கார வேலை செய்பவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அழகிரி (வயது 50) இவர் வீட்டு அலங்கார வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7 ஆம் தேதி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!