6,500 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கோரி கரூரில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 6,500 செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தின் கீழ் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.
மேலும், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களையும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி. மூலம் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும்.
புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு செவிலியர் கல்லூரிகளில் செவிலியர்கள், செவிலியர் போதகர்கள் ஆகியோரை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
