கோயம்புத்தூர் — கோவா மாநிலம் மபுசாவில் நடைபெற்ற மூன்றாவது உலக தாய் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் பங்கேற்ற கோவை மாவட்ட வீரர்கள் ஒரு தங்கம், ஒரு

வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றனர். தாய் பாக்ஸிங் இந்தியன் ஃபெடரேஷன் (Thaiboxing Indian Federation) சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் ஏழு

நாடுகள் பங்கேற்றன.
இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மாணவ, மாணவிகளும் மூன்று நடுவர்களும்

பங்கேற்றனர். தமிழகக் குழுவை தமிழ்நாடு தாய் பாக்ஸிங் சங்கத் தலைவர் கியூஷி டாக்டர் ஃபிராங்க்ளின் பென்னி மற்றும் சங்கச் செயலாளர் ரென்சி ஷேக் அப்துல்லா ஆகியோர் வழிநடத்தினர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த டி. எஸ். அதிவ் தங்கப் பதக்கமும், அஜீஸ் ரகுமான் வெள்ளிப் பதக்கமும், பி. நேத்ரா வெண்கலப் பதக்கமும் வென்றனர். கோவையைச் சேர்ந்த எஸ். எம். சூர்யா பிரபு போட்டியில் தேசிய நடுவராகப் பணியாற்றினார்.
பதக்கம் வென்ற மூவருக்கும், தேசிய நடுவர் எஸ். எம். சூர்யா பிரபுவுக்கும் கோவை மாவட்ட தாய் பாக்ஸிங் சங்கம் சார்பில் கோவை கணபதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. அமிர்தராஜ், துணைச் செயலாளர் சிவராமச்சந்திரன், துணைத் தலைவர் ஜெயவர்த்தனவேல் மற்றும் பயிற்சியாளர்கள் அவர்களை வரவேற்றுப் பாராட்டினர்.
