Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேர் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் விரட்டிச் சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் ஆண்டிமடம் அருகே அகரம் குமிளங்குழி பகுதியைச் சேர்ந்த கபிலன் (22) மற்றும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்குமார் (25), விக்னேஷ் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த 110 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!