Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு.. திருச்சியில் சம்பவம்

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்சி சித்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதி (37).இவரது மனைவி பார்வதி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமி யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை திருடிவிட்டு மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த பார்வதி அதிர்ச்சி அடைந்து உடனடியாக கணவர் பாரதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாரதி இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

பொன்மலையில் கல்லூரி மாணவனின் காரை தாக்கிய வாலிபர்கள்

திருச்சி பொன்மலை திருநகர் விஸ்டரிப்பு பகுதியில் சேர்ந்தவர் மெல்வின் ஷாம் வயது 20 இவர் தனது நண்பர்களுடன் கல்லூரி ஆண்டு விழாவில்கலந்து கொண்டுவீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார் அப்பொழுதுபொன்மலைப்பட்டி புது பாலம் அருகில் வரும் பொழுது 3 வாலிபர்கள் காரை வழிமறித்து மெல்வின் ஷாமிடம் தகராறில் ஈடுபட்டு காரை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் இது குறித்து மெல்வின் ஷாம் பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்மலை பகுதியைச் சேர்ந்த ரோஷன் விமல் அலெக்ஸ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!