இலங்கையில் நடந்த கராத்தே போட்டியில் திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம், வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை திருவெறும்பூர் ஜூலை 31
இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில்

இயங்கிவரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கராத்தே ஆர் சுதாகர் மற்றும் அவருடைய இரண்டு மாணவர்களும் பங்கேற்றனர். அதில் தலைமை பயிற்சியாளர் கராத்தே ஆர். சுதாகர் 40 முதல் 49 வயதினருக்கான மாஸ்டர் பிரிவில் பங்குபெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அதேபோல் அவருடைய மாணவர்கள் ப. ரோகன்(15),ஆர் டி. இசை(10) இருவரும் தலா இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதையறிந்த பொதுமக்கள், சக கராத்தே வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
