Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 தமிழர்கள் சுட்டுக் கொலை.. கர்நாடக வனத்துறை ஊழியர்களுக்கு முன்ஜாமீன்

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அம்மாநில வனத்துறை ஊழியர்கள் 3 பேருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. காட்டுக்குள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ததாக வனத்துறையினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!