சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 3 தனிக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கட்டடக் கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழு, கட்டட வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
