Skip to content

கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையோர மரத்தில் பலமாக மோதி, பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த சிவம் (21), சுனில் (23), மன்கி (19) ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. திருமணக் கொண்டாட்டத்திற்காகச் சென்ற இடத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!