திருவாரூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், விவசாயிகளிடமிருந்து புதிதாக நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய இடவசதி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணங்களால் நெல் மூட்டைகளை அடுத்தகட்டமாக கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூரில் 3,00,000 நெல் மூட்டைகள் தேக்கம்.. விவசாயிகள் வேதனை
