Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை 32 பேர் பலி: 700 பேர் காயம்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர். வெனிசுலாவின் மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்களில் இடிந்து தரைமட்டமாகின. இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கராகஸ் அருகே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அவசரநிலையை அறிவித்தார். இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. வெனிசுலாவின் முக்கிய சர்வதேச நுழைவாயிலான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அந்த விமான நிலையம் மூடப்படும் என்று ரோட்ரிக்ஸ் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக, நாட்டிலுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவமனைகளுக்கு விரைந்து வர வேண்டும் என்றும் ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 10,000 முதல் ஒரு லட்சம் வரை இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!