Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரம்பரிய விதைகளை காக்கும் பிரம்மாண்ட திருவிழா!

தமிழகத்தில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், வேலூரில் வரும் ஜூன் 28-ஆம் தேதி “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சத்குருவின் மண் காப்போம் (Save Soil) இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, விவசாயிகள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், விதை பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அறிவியல் மற்றும் அனுபவ பகிர்வு தளமாக அமையும்.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் நிபுணர்கள் மற்றும் விதை பாதுகாவலர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம், இயற்கை விவசாய முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

பாரம்பரிய விதைகள் முதல் லாபகரமான விவசாயம் வரை…

இன்றைய சூழலில் நஞ்சில்லாத உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் பொருளாதார தன்னிறைவு மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாரம்பரிய காய்கறி மற்றும் கிழங்கு வகை விதைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை வணிக ரீதியாக லாபகரமான தொழிலாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

இயற்கை விவசாயத்தில் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறுவது, தரமான காய்கறி உற்பத்தி, விதை சேமிப்பு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் வழிகாட்ட உள்ளனர்.

2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள்… 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள்!

இந்த திருவிழாவின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலும்,

  • பாரம்பரிய காய்கறி விதைகள்
  • கிழங்கு வகை விதைகள்
  • இயற்கை விளைபொருட்கள்
  • மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள்
  • விவசாய தொழில்முனைவோரின் தயாரிப்புகள்

உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன.

இது விவசாயிகளுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறியும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

விதை பாதுகாவலர்களுக்கு தேசிய அளவிலான கவுரவம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரிய பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வரும் முன்னோடி விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கப்பட உள்ளது.

சுமார் 10 முன்னோடி விதை பாதுகாவலர்கள் இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்பட உள்ளனர். இது பாரம்பரிய விவசாய மரபை அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட விழா

இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் மற்றும் ஆரோக்கியமான உணவு குறித்து ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். முன்பதிவு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். எதிர்கால தலைமுறைக்காக பாரம்பரிய விவசாய மரபை காக்கும் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இந்த நிகழ்வு அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!