Skip to content

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஐந்து விசைப்படகையும் அதிலிருந்து 32 மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின்  கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.  மேலும் இந்த பிப்ரவரி மாதம் மட்டும் 11 படகுகளையும் 66 மீனவர்களை இலங்கை கடற்படை  சிறை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்திய,  அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!