Skip to content

கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கீழ தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் போது ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்படுகிறது. அவரது தொலைபேசி எண்ணிற்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். அந்தப் பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் அந்தப் பெண்ணின் கணவர் அந்தப் பெண் தகவல் தெரிவித்தது போல் போனில் தகவல் தெரிவித்து கடந்த எட்டாம் தேதி புகழேந்தி மருதநல்லூருக்கு

(இறந்த புகஜேந்தி)

வரவழைக்கப்பட்டுள்ளார். அங்கு வந்த புகழேந்தியை இனி இந்த பெண்ணிற்கு குறுஞ்செய்தியோ, தொலைபேசி அழைப்பு கொடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என அடித்து, கண்டித்ததாக தெரிகிறது.

மேலும் இது தொடர்பாக யாரிடமும் எந்த தகவலும் தெரிவிக்கக்கூடாது எனவும் அவர்கள் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த அடி வாங்கிய புகழேந்தி, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் வீடு திரும்பி உள்ளார் .

அடுத்த நாள் உடல்நிலை மோசமாகவே வீட்டில் உள்ளவர்கள் என்ன நடந்தது என புகழேந்தியிடம் விசாரித்துள்ளனர். புகழேந்தி நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக புகழேந்தி, கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்படுகிறார். அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி புகழேந்தி உயிரிழந்தார் .

புகழேந்தின் உறவினர்கள் மருதநல்லூரை சேர்ந்த நான்கு நபர்கள் புகழேந்தியை வரவழைத்து கடுமையாக அடித்துள்ளனர் .
அதனால் உயிரிழந்தார் என நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் விசாரணை செய்ததில், நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சிபி சக்கரவர்த்தி மற்றும்இவரது நண்பரான கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன் ஆகிய மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட ஐந்து நபர்கள் புகழேந்தியை கடுமையாக அடித்தது தெரியவந்தது .

இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன் ஆகிய மூன்று நபர்கள் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தாரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த புகழேந்தியின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கும்பகோணம் மற்றும் மருதாநல்லூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

error: Content is protected !!