Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 37 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 37 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உங்கள் நல்ல கிராமம்’ என்ற மறுவாழ்வு திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர்.
சரணடைந்த நக்சலைட்டுகளில் 27 பேரின் தலைக்கு மொத்தம் 65 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!