நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நேற்று (செப்.3) உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
