Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் இரண்டு காவலர்கள், இரண்டு பொதுமக்கள் என நான்கு நபர்கள் விசாரணை ஆஜராகி உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ (CBI) அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று விசாரணைக்காக பணியில் இருந்த 2 காவலர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் என மொத்தம் 4 நபர்கள் விசாரணைக்கு ஆஜரா‌கி உள்ளனர்.

error: Content is protected !!