Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!