கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அன்புக்கரங்கள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெண்ணெய்மலை

அன்புக்கரங்கள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ் உட்பட பாஜக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
