காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. காலாண்டு விடுமுறையின்போது மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்களை பள்ளிக்கு அழைக்கும் பட்சத்தில் அசம்பாவிதங்களுக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு என்றும் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
