தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வரிசையில் நிற்காமல் நேரடியாக செல்ல முயன்ற கரண்குமாரை, சுந்தர்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, இருவரும் கரண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
