Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பெரும்பாலானோர் இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர்,இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன கிருஷிகா ஸ்ரீ, ரிதன்யா ஸ்ரீ ஆகும் ,இருவரையும் அழைத்துக் கொண்டு டியூசன் செல்லும் பொழுது சோமசுந்தரம் என்பவர் வீட்டில் வளர்க்கும் நாய் அவிழ்ந்து வந்து கிருஷிகா ஸ்ரீ மீது பாய்ந்து தலை மற்றும் முகம் பகுதியில் கடித்துள்ளது அப்பகுதி பொதுமக்கள் நாயை விரட்டி ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கிருஷிகா ஸ்ரீ க்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து கோமங்கல காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் 4 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!