Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் சிக்கிய 40 கிலோ கடல் ஆமை

ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் சிக்கிய 40 கிலோ கடல் ஆமை

ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 40 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பிரம்மாண்டமான பச்சைக் கடல் ஆமை சிக்கியது.

அழிவின் அபாயத்தில் உள்ள இந்த அரியவகை கடல் ஆமை வலையில் சிக்கியதைக் கண்ட மீனவர்கள், அதனை கவனமாக மீட்டனர்.

பின்னர் ஆமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மீண்டும் கடலில் உயிருடன் விடுவித்தனர்.

அரியவகை கடல்வாழ் உயிரினத்தைப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விடுவித்த மீனவர்களின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!