Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங்கிரசை திமுக சும்மா விடாது… திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்

காங்கிரசை திமுக சும்மா விடாது-திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,முன்னாள் மத்திய அமைச்சர்
முரசொலி மாறன், திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்உள்ளிட்டோரை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது;-
இன்றைய முதலமைச்சர் விஜய் மிசா காலத்தில் ஒரு வயது குழந்தையாக இருந்திருப்பார். மிசாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை என்று கொச்சைப்படுத்துகிறார்கள். நமது கூட்டணியில் இருந்து வெளியே சென்ற வைகோ கூட
நெல்லையில் இருந்தபோது வாரம் தவறாமல் நான்
ஜெயிலில்
மு.க. ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்து வந்ததாக கூறியுள்ளார்.
ஜெயிலில் காவல்துறையினர் அவரை அடித்த போது கீழே சுருண்டு விழுகிறார் அப்போது சிட்டிபாபு போய் குறுக்கே ஓடி வந்து அவரை காப்பாற்றினார். பின்னர் ஜெயிலில் சிட்டிபாபு இறந்து போகிறார். தளபதிக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. நீங்கள் அப்பல்லோ

மருத்துவமனைக்கு எதற்காக சென்றீர்கள்.
உங்களுக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள் என எங்களால் சொல்ல முடியும். சட்டமன்றத்தில் முதல்வர் சினிமாவில் வசனம் பேசுற மாதிரிபேசுகிறார். எந்த மானிய கோரிக்கை மீதும் பதில் சொல்லவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சியின்போது
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு, 100 நாள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை. எந்த ஊழலும் நடக்கவில்லை என கூறிய
சர்க்காரியா கமிஷனை கையில் எடுக்கிறார்கள். இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்துக்கு திமுக, அதிமுக இடையே போட்டி நடக்கிறது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
நாதியில்லாத காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என கூவிக் கொண்டிருக்கிறார்கள் இதை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களை சொல்வார்களா? சொன்னால் என்ன நடக்கும் விஜய்க்கு நன்கு தெரியும். பாஜக உள்ளே வந்துவிடும் பாஜக பற்றியும் அவர் உச்சரிப்பதில்லை. நாங்கள் காங்கிரசை விடப்போவதில்லை.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என கூறுகிறார்கள். ரூபாய் 34 ஆயிரம் கோடி அளவுக்கு திட்ட பணிகள் நடந்துள்ளன என்றார்.

பின்னர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறும்போது….
மிசாவில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்திடம் உள்ளது அதை அமைச்சர் நிர்மல் குமார் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இந்தியாவிலேயே தங்கள் கூட்டணியை அரவணைத்து செல்லக்கூடிய தலைவராக தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அவர்களாக வெளியேறுவதற்கு திமுக காரணமாகாது.
திமுக ஒரு போதும் தங்களது கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுத்ததில்லை இனியும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசும்போது, அமைச்சர்கள் எல்லாரும் கோயபல்ஸ் கோட்பாட்டைதான் பின்பற்றுகிறார்கள். பொய்… பொய்… பொய்… பேசுவதை மட்டுமே கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.
மிசா தியாகிகளை கொச்சைப்படுத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா
முதலில் மாஃபா பாண்டியராஜன் பேசினார். அடுத்து எச்.ராஜா பேசினார். இப்போது காக்கி டவுசர் நிர்மல்குமார் பேசுகிறார்.
மூவரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
அதிகாரத்திற்கு கட்டுப்பட மாட்டேன்’ எனச் சொல்லி சிறைக்கு சென்றவரை பற்றி, ‘எனது படத்தை ரிலீஸ் செய்ய விடுங்கள்’ என கொடநாடு சென்று கெஞ்சியவர் பேசுவதற்கு துளியும் தகுதி இல்லை.
திரையில் டூப் போட்டு சண்டை போடுவதற்கும், களத்தில் இறங்கி மக்கள் உரிமைக்காக லத்தி அடி வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும்!
எங்கள் இயக்கத்தின் வரலாறு ஏசி ரூமில் எழுதி வாங்கிய டயலாக் பேப்பர் அல்ல; சிறைக் கொட்டடிகளிலும், போராட்டக் களங்களிலும் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு
என்றார்.

error: Content is protected !!