மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் (ஆர்ச்) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் மற்றும் பெரியார் ஆர்ச்சை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியிலேயே நக்கீரர் ஆர்ச் அகற்றப்பட்டது. தற்போது பெரியார் ஆர்ச்சும் இடிக்கப்பட்டுள்ளது.
