கரூர் அருகே நேற்று ரயில்வே குகை வழிப் பாதையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சிரிப்பாய்ந்து சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்: பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர்.
கரூரில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையில், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே குகை வழிப் பாதையில் நேற்று திடீரென சாரைப்பாம்பு ஒன்று சாலையில் அங்கும் இங்கும் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சிறப்பு கருவிகளின் உதவியுடன் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடிக்க முயன்ற பொழுது இருசக்கர வாகனத்திற்குள் புகுந்து சீறிப்பாய்ந்து சென்றது பின்னர் அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
பாம்பு திடீரென பொதுமக்கள் அதிகம் செல்லும் குகை வழிப் பாதையில் தோன்றியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
