Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு…

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் சுடலை மாடசாமி கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த வாலிபரிடம், மர்ம நபர் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குறும்புர் அருகேயுள்ள பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் முத்துச்செல்வம் (26). இவர் தற்போது கோயம்புத்தூரில் உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்த இவர், ஏரல் அருகே அமைந்துள்ள ஆறுமுகமங்கலம் சுடலை மாடசாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார். 

அங்குச் சென்றவர், இயற்கை உபாதை கழிப்பதற்காகக் கோயிலுக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முத்துச்செல்வத்தின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

சங்கிலியைப் பறித்துச் சென்ற நபர் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர் என்றும், சாம்பல் நிற கட்டம் போட்ட டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து முத்துச்செல்வம் கோயில் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!