Skip to content
Home » ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் ஸெடி வயது 22.  இவர் தன்னைவிட   வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர். 2கே கிட்ஸ்சான ஸெடிக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.  நம்ம ஊர்  வாலிபர்களைப்போல  உன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நான் அப்பன் இல்ல என்று சொல்லல.  எல்லாம் என் குழந்தைகள் என  தாராள மனதுடன் சொன்னார்.

அதோடு விட்டாரா,  5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பும் நடத்திவிட்டார்.  புகைப்படங்களை சமூக வலைதளங்களில்  வெளியிட்டுk;  அசத்திவிட்டார். அதுவும் வைரலாகி வருகின்றது. அந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று  வளைகாப்பு கண்டவரில் ஒருவரான ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்றும்   பரந்த மனதுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் 22 வயதான ஸெடி ரொம்ப தைரியசாலிதான். ஒரே நேரத்தில் 5 பெண்களை தாயாக்கியதுடன், ஒரே நேரத்தில் 5 குழந்தைகளுக்கு தந்தை ஆகவும் போகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!