Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் பாதிப்பு… விவசாயிகள் கவலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழுர் ஒன்றியம் டெல்டா பகுதியாக இருந்து வருகிறது. காவிரி நீர் பாயும் கொள்ளிட ஆற்றை ஒட்டியுள்ள பகுதியான கோடாலி கருப்பூர், அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி, சோழமாதேவி,
கண்டியங் கொல்லை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காரிப் பருவத்தில் மோட்டார் பாசனத்தை நம்பி தற்போது சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சா

குபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்கதிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு செய்வதற்கு விவசாயிகள் தயார் நிலையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கோடாலி கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெறப்படும் மும்முனை மின்சாரம் தற்போது கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாய நிலங்களுக்கு மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு பத்து முறைக்கும் மேலாக மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுவதால் மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. குறிப்பாக கோடாலி கருப்பூர், சோழமாதேவி,

இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது விவசாய நிலங்கள் நீர்வரத்தின்றி வெடித்து குறுவை நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோன்று குறைந்த மின்னழுத்தம் காரணமாக சில நேரங்களில் மின் மோட்டார் காயில்கள் பழுதாகி விடுவதாகவும்

இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்கண்ட கிராமங்களில் அரசு உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக விவசாய சங்கங்களை திரட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி கடுமையான போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!