திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்ததாக, அவரது சித்தப்பா சங்கர் (55) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொன்னேரி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கைதான சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி பேரப்பிள்ளைகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
