திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்தது. அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தகுழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன் ராஜை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காந்தி மார்க்கெட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் தனபால் இவரது மனைவி கவிதா (48) . இவர்களுக்கு குழந்தை இல்லை. தனபால் கடந்த 20 ஆண்டுகளாக வயிறு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி கவிதா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

